மகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை !

மகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை !

மகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை !
Published on

மதுரையில் மகளை கிண்டல் செய்த இளைஞர்களை கண்டித்த தந்தையை 3 இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மதிச்சியம் ராமராயர் மண்டகப்படி பகுதியில் வசித்துவந்தவர் மணிகண்டன் (35). இவர் லோடுமேன் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ஹேமலதா என்பவருக்கும் திருமணம் ஆகி  இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு படித்து வரும் மணிகண்டனின் முதல் மகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது அல்வா என்ற மகேஸ்வரன் என்பவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. 

(உயிரிழந்த  பெண்ணின் தந்தை மணிகண்டன்)

இதனால் மன உளைச்சல் அடைந்த அந்தப் பெண்  தனது தந்தை மணிகண்டன் மற்றும் தாய் மாமா மகாதேவனிடம் கூறியுள்ளார். அதற்காக மகேஸ்வரனை இருவரும் கண்டித்துவிட்டு வந்துள்ளனர். அதை தொடர்ந்து நேற்று மாலை மணிகண்டனை வந்து சந்தித்த அல்வா மகேஷ், மீனாட்சி சுந்தரம், மாரி ஆகிய மூவரும் உன்னைக் கொல்லாமல் விட மாட்டோம் என்று மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து 13ஆம் தேதி உணவு வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த மணிகண்டனை குடிபோதையில் இருந்த மகேஸ்வரனும் அவரது நண்பர்களும் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பலத்த காயமடைந்த 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்ரனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து மதிச்சியம் காவல்துறையினர் அல்வா மகேஷ், மீனாட்சிசுந்தரம், மாரி ஆகிய 3 பேரின் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளிடம் தகராறு செய்த இளைஞனை கண்டித்தற்கு தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com