\
வேட்டி கட்டியதால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு

வேட்டி கட்டியதால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு

வேட்டி கட்டியதால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு
Published on

மதுரையில் வேட்டி கட்டி பல்கலைக்கழகத் தேர்வு எழுத வந்த மாணவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி வாயிலாகத் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். பிஎஸ்சி லைப்ரேரி சயின்ஸ் படிக்கும் அவர் ஏற்கனவே 3 தேர்வுகள் எழுதி இருக்கிறார். முதல் தேர்வுக்கு வேட்டி கட்டி வந்து தேர்வு எழுதியபோது பல்கலைக்கழகத்தால் எச்சரிக்கப்பட்டார். மீண்டும் வேட்டி கட்டி தேர்வு எழுத வந்த அவரை, பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்க மறுத்துவிட்டது.

இந்த தகவல் அறிந்து புதிய தலைமுறை அவருடைய பிரச்னையை தொலைக்காட்சி செய்தியில் கொண்டுவந்தது. இதன் எதிரொலியாக தற்போது அம்மாணவன், பல்கலைக்கழகத்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருடைய தேர்வெழுதும் நேரம் வீணாகிவிட்டதாக வருத்தத்துடன் சென்றார், கண்ணன்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com