ஜல்லிக்கட்டுக்கு தயாரான மதுரை: அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு போட்டிகளுக்கான தேதி அறிவிப்பு

உலகப்பிரசித்தி பெற்ற அவனியாபுரம், பாலமேடி & அலங்காநல்லூரில் நடக்கும் போட்டிக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வருடந்தோறும், தைத் திங்களில் மதுரை மாவட்டத்தில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வருடமும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், போட்டிகள் நடைபெறும் தேதியை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். அதன்படி, அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள திடலில் 15ம் தேதியும், பாலமேடு பேரூராட்சியில் மஞ்சமலை ஆறு திடலில் 16ம் தேதி மற்றும் அலங்காநல்லூர் பேரூராட்சியில் கோட்டைமுனி வாசல் மந்தை திடலில் 17ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பாரம்பரியமாக நடைபெறும் அந்தந்த இடங்களிலேயே, இந்த வருடமும் சிறப்பாக போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு குறித்து சம்மந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நாளை மறுநாள் புதுக்கோட்டையில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

jallikattu 2024
தமிழகத்தின் தென் முனையில் உள்ள ஆழ்கடலில் 4 வட்டாரங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்க மத்திய அரசு ஏலம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com