“சிட்னியாக மாறப் போகிறது மதுரை ” : செல்லூர் ராஜூ

“சிட்னியாக மாறப் போகிறது மதுரை ” : செல்லூர் ராஜூ

“சிட்னியாக மாறப் போகிறது மதுரை ” : செல்லூர் ராஜூ
Published on

மதுரை விரைவில் சிட்னி நகரைப் போல விளங்க போகிறது என மதுரையில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை ஜெய்ஹிந்திபுரம் பகுதியில் அதிமுகசெயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீ கலந்து கொண்டு பேசிய போது  “ தேர்தலில் கூட்டனி இல்லாமல் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சி அ.தி.முக. இந்தியாவில் 3-வது பெரிய கட்சி அதிமுகதான். 30 ரூபாய்க்கு துவரம் பருப்பு வழங்கியது இந்த அரசு. தற்போது தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலம் நம் தமிழகம் தான்.

தேர்தலை கண்டு அஞ்சாத ஒரு கட்சி அ.தி.மு.க.தான். நாடாளுமன்ற தேர்தல் உடன் உள்ளாட்சி தேர்தல் வர போகிறது. மதுரையில் தொழில் முதலீட்டாளர்கள் வர இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரை போல் உலகத்தரம் வாய்ந்த பூங்காக்கள் வைகை நதி பாயும் கரை ஓரம் அமைய இருப்பதால் மதுரை விரைவில் சிட்னி நகரைப் போல விளங்க போகிறது” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com