\
மதுரை: மதுபோதையில் காவலாளியை தாக்கிய இளைஞர்கள் - பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

மதுரை: மதுபோதையில் காவலாளியை தாக்கிய இளைஞர்கள் - பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

மதுரை: மதுபோதையில் காவலாளியை தாக்கிய இளைஞர்கள் - பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள்
Published on: 

மதுரையில் இரவு நேர காவலாளியை மதுபோதையில் தாக்கும் இளைஞர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், அப்பகுதியில் உள்ள மரக்கடை ஒன்றில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராஜ்குமார் மரக்கடையில் பணியில் இருந்தபோது மதுபோதையில் வந்த மூன்று இளைஞர்கள் ராஜ்குமாரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இந்நிலையில், காவலாளி ராஜ்குமாரை இளைஞர்கள் தாக்கிய காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில், இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட விராலிபட்டி பகுதியைச் சேர்ந்த சந்தன பிரபு, கண்ணன் மற்றம் ஜனகை ஆகிய மூன்று இளைஞர்களை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com