\
பழக்கடைக்காரரைத் தாக்கிய காவல் ஆய்வாளர்: சிசிடிவி வெளியீடு

பழக்கடைக்காரரைத் தாக்கிய காவல் ஆய்வாளர்: சிசிடிவி வெளியீடு

பழக்கடைக்காரரைத் தாக்கிய காவல் ஆய்வாளர்: சிசிடிவி வெளியீடு
Published on: 

மதுரையில் பழக்கூடையை தள்ளிவிட்டு பழக்கடைகாரர்களை ‌போக்குவரத்து காவல் ஆய்வாளர் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. 

மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள பழக்கடைக்கு சென்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கரத்தினம், நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகக் கூறி பழக்கூடையை கீழே தள்ளியும், கடையில் இருந்த பாலா மற்றும் அய்யப்பன் ஆகிய இருவரை தாக்கியதாகவும் பழக்கடை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து காவல்துறையினர் செயலுக்கு பழக்கடை வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பழக்கடைகாரர்களை ‌போக்குவரத்து காவல்துறையினர் தாக்கும் வீடியோ காட்சியும் வெளியாகி உள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com