\
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை: நீதிமன்றம் அதிரடி

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை: நீதிமன்றம் அதிரடி

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை: நீதிமன்றம் அதிரடி
Published on

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணிகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியை பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலையின் 2வது பிரிவு அனுமதி பெறப்பட்ட இடத்தில் தொடங்கப்படாததால் விரிவாக்கப் பணியை நிறுத்த உத்தரவிட வேண்டும். ஆலை விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தையும் நிர்வாகம் கேட்கவில்லை. 2ஆவது யூனிட் தொடங்க சற்றுச்சூழல், வனத்துறை தந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தர் , அனிதா சுமந்த ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.மேலும், ஆலையை நடத்துவதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை மத்திய அரசு பிரிசீலித்து 4 மாதங்களில் முடிவு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com