மனைவியின் திருமணத்துக்கு மீறிய உறவால் ஆபத்து - கணவரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்!

மனைவியின் திருமணத்துக்கு மீறிய உறவால் ஆபத்து - கணவரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்!
மனைவியின் திருமணத்துக்கு மீறிய உறவால் ஆபத்து - கணவரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்!

தனது மனைவி மற்றும் மனைவியின் கள்ளக்காதலனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கணவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்குமாறு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நாராயணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "நான் தேனி மாவட்டம் கம்பத்தில் கடைகள் வைத்து நடத்தி வருகிறேன். எனக்கும், எனது மனைவி சத்யாவுக்கும் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கூடலூரைச் சேர்ந்த அபிஷேக்குடன் எனது மனைவிக்கு முறையற்ற பழக்கம் ஏற்பட்டது. அபிஷேக்கின் ஆசை வார்த்தைக்கு மயங்கி பணம் நகைகளை எனது மனைவி கொடுத்துள்ளார். இந்த விஷயம் தெரியவந்ததும் நான் இருவரையும் எச்சரித்தேன். இதையடுத்து, அபிஷேக், அவரது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து என்னை கொலை செய்வதாக மிரட்டி வருகிறார். மேலும், எனது மனைவி மற்றும் அவளது கள்ளக்காதலன் அபிஷேக் ஆகியோர் எனது சொத்துக்களையும் கடை சொத்துக்களையும் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். என்னை கொலை செய்ய வேண்டும் என்ற பல திட்டங்களையும் தீட்டி வருகின்றனர். எனவே எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவானது நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "மனுதாரர் தனது உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த மனுவின் அடிப்படையில் பாதுகாப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com