கொடைக்கானல் போட் கிளப்பை பூட்டி, சீல் வைக்க உத்தரவு

கொடைக்கானல் போட் கிளப்பை பூட்டி, சீல் வைக்க உத்தரவு
கொடைக்கானல் போட் கிளப்பை பூட்டி, சீல் வைக்க உத்தரவு

கொடைக்கானல் போட் கிளப்பை பூட்டி, சீல் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கொடைக்கானலைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கொடைக்கானல் ஏரியின் 8 செண்ட் நிலம் 1921ல் கொடைக்கானல் போட் கிளப்பிற்காக 8 ரூபாய் குத்தகைக்கு விடப்பட்டது. செப்டம்பர் 1 ஆம் தேதியோடு, குத்தகை காலம் முடிந்து விட்டது. 

இந்நிலையில், 2009 ஆம் ஆண்டு கொடைக்கானல் ஏரி முழுவதுமாக கொடைக்கானல் நகராட்சியிடம் ஒப்படைக்கப்படுவதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 8 செண்ட் நிலம் மட்டுமே கொடைக்கானல் போட் கிளப்பிடம் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தாலும், 10 ஆயிரம் சதுர அடிக்கும் அதிகமான இடங்களை போட் கிளப்பினர் பயன்படுத்தி வந்தனர். 

அதோடு, போட் கிளப்பினரும், தனியார் ஹோட்டலைச் சேர்ந்தவர்களும் எவ்வித அனுமதியும் பெறாமலும், நகராட்சிக்கு எவ்வித கட்டணத்தையும் செலுத்தாமலும், படகுகளை வாங்கி விட்டு, கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. 

ஆகவே, அதனைத் தடுக்கும் வகையில் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரியை நடத்துவது தொடர்பாக வெளிப்படையான டெண்டர் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இதுபோல பல வழக்குகளும் தொடரப்பட்டன. 

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு கொடைக்கானல் போர்ட் கிளப்பை பூட்டி சீல் வைக்கவும், மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானல் ஏரியில் தனியார் படகுகளை இயக்கவும் தடை விதித்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com