\
உயர்நீதிமன்ற மதுரைகிளை
உயர்நீதிமன்ற மதுரைகிளைமுகநூல்

நடிகர் தனுஷ் தங்களது மகன் என தம்பதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

நடிகர் தனுஷ் தங்களது மகன் என தம்பதி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைகிளை ரத்து செய்துள்ளது.
Published on

நடிகர் தனுஷ் தங்களது மகன் என தம்பதி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைகிளை ரத்து செய்துள்ளது. நடிகர் தனுஷை தங்களது மகன் என உரிமை கோரி மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து அவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு நீதிபதி ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ”தவறான உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தவித ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை.” என்று நீதிபதி கூறினார்.

இந்நிலையில். இது ஒரு அபத்தமான வழக்கு எனக்குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com