தமிழ்நாடு
தலைமை செயலாளர், டிஜிபி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
தலைமை செயலாளர், டிஜிபி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்கள் பங்கேற்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் தலைமை செயலாளர், முதன்மை செயலாளர் மற்றும் டிஜிபி பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 5ஆம் தேதி போடி விலக்கில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்க தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் வழக்கு தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதன்மை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் பதில் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வரும் 3ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

