சாத்தான்குளம் விவகாரம்: கூடுதல் டிஎஸ்பி உட்பட மூவர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை - மகன் சித்ரவதை மரணம் விவகாரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் உட்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் ஆகியோர் அடுத்ததடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஒட்டு மொத்த இந்தியாவே இந்தச் சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். முதல்வரும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தை சிபிஐக்கு மாற்ற அனுமதிக்கக்கோரி தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்தது. அப்போது அரசின் கொள்கை முடிவிற்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் தந்தை - மகன் சித்ரவதை மரணம் விவகாரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் உட்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது