தாமிரபரணியிலிருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் எடுக்க அனுமதி

தாமிரபரணியிலிருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் எடுக்க அனுமதி
Published on

நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பான ஆலைகளுக்கு நீர் எடுக்க தடை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றிலிருந்து, சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்படும் குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 2 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் குளிர்பான ஆலைகள் நீர் எடுக்க இடைக்கால தடை விதித்து கடந்த நவம்பரில் உத்தரவிட்டது. இந்தநிலையில், தாமிரபரணி ஆற்றிலிருந்து உபரி நீரை மட்டுமே எடுப்பதாக குளிர்பான ஆலைகள் தரப்பில் விளக்கம் கூறப்பட்டது. மேலும், சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கும் மற்ற நிறுவனங்களும் தாமிரபரணி ஆற்றிலிருந்து நீர் எடுக்கும் நிலையில், குளிர்பான ஆலைகளுக்கு எதிராக மட்டுமே வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பதாகவும் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், குளிர்பான ஆலைகள் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்கத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் செல்வம் மற்றும் கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com