நாகர்கோவில் காசியின் ஃபோன், லேப்டாப்பில் இத்தனை ஆபாச வீடியோக்களா? - ஷாக்கான நீதிபதி!

நாகர்கோவில் காசியின் ஃபோன், லேப்டாப்பில் இத்தனை ஆபாச வீடியோக்களா? - ஷாக்கான நீதிபதி!
நாகர்கோவில் காசியின் ஃபோன், லேப்டாப்பில் இத்தனை ஆபாச வீடியோக்களா? - ஷாக்கான நீதிபதி!

1900 நிர்வாண படங்கள், 400 ஆபாச வீடியோக்கள் நாகர்கோவில் காசியின் மடிக்கணினி மற்றும் செல்போனில் இருந்ததாக சிபிசிஐடி குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

ஆசை வார்த்தைகளைக் கூறி சமூக வலைதளங்கள் மூலமாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றியதோடு, பணமோசடி மற்றும் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்ற காசி கடந்த 2020-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் மாணவிகள் உட்பட ஏராளமான இளம் பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ள காசி மீது போக்சோ வழக்கு, பாலியல் வன்கொடுமை வழக்கு, கந்துவட்டி வழக்கு என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றில் இருந்த ஆபாச படங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் சைபர் க்ரைம் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இவற்றை யார் அழித்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், காசியின் தந்தையான தங்கபாண்டியன் இந்த செயலை செய்திருப்பதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் காசியின் தந்தை தங்க பாண்டியன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீசார் தரப்பில், காசியின் தந்தை தங்கபாண்டிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும், விசாரணையின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, காசியின் வீட்டில் இருந்து ஆப்பிள் மொபைல் ஃபோனும் அவர் பயன்படுத்திய லேப்டாப்பும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தபோது 1900 நிர்வாண படங்கள், 400 ஆபாச வீடியோக்கள் மடிக்கணினி மற்றும் செல்போனில் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளதாக சிபிசிஐடி குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

120 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சிலர் மட்டுமே சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளனர். இன்னும் பல சாட்சிகளை விசாரணை செய்ய வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் சிபிசிஐடி தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான காசியின் தந்தை தங்க பாண்டிக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com