மதுரை அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை: நோயாளிகள் அதிர்ச்சி
தென் மாவட்டத்தின் முக்கிய அரசு மருத்துவமனையாக இருந்து வருவது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. இங்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனை பெண்கள் பொது வார்டில் சிகிச்சை பெற்று வரும் பெண் நோயாளிகளுக்கு மத்தியில் எலிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தாய்மார்களுடன் பச்சிளம் குழந்தைகளும் இதே வார்டில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
எலிகள் உணவுகளை கடித்து திண்பதோடு சில நேரங்களில் நோயாளிகளின் கால்விரல்களையும் கடித்துவிட்டு சென்றுவிடுகிறது. இதனால் ஒரு நோய்க்கு சிகிச்சை அளிக்க வரும் நோயாளிகளுக்கு கூடுதல் ஒரு சுமையையும் அரசு மருத்துவமனை அளித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதேபோன்று கொரோனா மருத்துமனையிலும் எலித் தொல்லை இருப்பதாகவும் இதனால் சிகி்ச்சையில் உள்ள நோயாளிகளையும், செவிலியர்களையும் சில நேரங்களில் கடித்துவிடும் நிலை உள்ளது. உடனடியாக அரசு நிர்வாகம் தலையிட்டு எலித்தொல்லையை போக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் அளித்த விளக்கத்தில், நோயாளிகள் தின்பண்டங்களை அறைகுறையாக படுக்கைகளின் அருகே வைப்பதால் எலிகள் வருகின்றது. எலிகளை வார்டுக்குள் வராமல் தடுக்க எவ்வளவோ முயற்சி எடுத்தும் வந்துவிடுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கொரோனா தாக்கம் அதிகரித்தும் வரும் சூழலில் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள்,செவிலியர்கள், மருத்துவமனை தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த்பணியாளர்கள் ஆயிரக்கணக்காணோர் தங்களிள் உயிரை துச்செமென கருதி பணியாற்றி வரும் நிலையில் நோயாளிகளின் சிறு சிறு அலட்சியங்களால் எலித்தொல்லை அதிகரித்து வருகிறது. நோயாளிகள் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் விளக்கமளித்தனர்.