மதுரை: கழிப்பறையில் வசிக்கும் குடும்பம் - கஜா புயலுக்கு பின் தொடரும் அவலம்!

மதுரை: கழிப்பறையில் வசிக்கும் குடும்பம் - கஜா புயலுக்கு பின் தொடரும் அவலம்!
மதுரை: கழிப்பறையில் வசிக்கும் குடும்பம் - கஜா புயலுக்கு பின் தொடரும் அவலம்!

மேலூர் அருகே 2 வருடத்திற்கு மேலாக கழிப்பறையில் குடியிருந்து வரும் குடும்பம், மழை உள்ளிட்ட காலங்களில் பள்ளிக்கூடம் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடையும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வஞ்சிநகரம் ஊராட்சிக்குட்பட்ட பெரிச்சான்குடி பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (65). 32 ஆண்டுகளாக அப்பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ள இவருக்கு, யசோதை என்ற மனைவியும், சுசி, சசிகலா என்ற இரண்டு மகள்களும், அழகுப்பாண்டி என்ற மகனும் உள்ளனர்.

பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி தனியாக குடியிருந்து வரும் நிலையில், வெள்ளைச்சாமி தனக்கு சொந்தமான இடத்தில் மண்குடிசை வீடுகட்டி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜாபுயலால் இவர்களது மண்வீடு முற்றிலும் சேதமானது, இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பாதிப்பு குறித்து கணக்கு எடுத்து சென்ற நிலையில் இவர்களுக்கு உதவித் தொகையோ அல்லது குடியிருக்க வீடோ எதுவும் கட்டித் தரவில்லை.

இதனால் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக அரசு கட்டிக்கொடுத்த கழிப்பறையை தங்களது வீடாக பயன்படுத்தி அதில் வாழ்ந்து வருகின்றனர், மேலும் மழை உள்ளிட்ட காலங்களில் அருகில் உள்ள பள்ளிக்கூடத்திலோ அல்லது உறவினர்களின் வீடுகளிலோ இரவில் மட்டும் படுத்துக் கொள்வதாக கூறும் அவர்கள், தங்களுக்கு குடியிருக்க அரசு வீடுகட்டித் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கொட்டாம்பட்டி ஒன்றியம், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தியிடம் கேட்டப்போது, “இதுகுறித்து தற்போது தான் தகவல் கிடைத்துள்ளது, உடனடியாக வருவாய்த் துறையினரை சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு அரசின் உதவி கிடைக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படப்பதாக தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com