\
மதுரை: பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை - அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்

மதுரை: பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை - அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்

மதுரை: பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை - அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்
Published on

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணிற்கு மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வந்த பெண் நோயாளிக்கு ரேடியாலஜி மருத்துவர் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெண்ணின் தாயார் உடனடியாக துறைத் தலைவர் மற்றும் மருத்துவமனை டீன் ஆகியோரிடம் புகாரளித்துள்ளார்.

இந்நிலையில், அந்த புகாரை விசாரிக்க மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு பின்னர் விசாரணை அறிக்கை மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவ உயர்கல்வித் துறை இயக்குனர் நாராயண பாபு, மருத்துவர் சக்கரவர்த்தியை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com