மதுரை: கொலை மிரட்டல் விடுத்த மாமனார்: ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற மருமகன்

மதுரை: கொலை மிரட்டல் விடுத்த மாமனார்: ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற மருமகன்

மதுரை: கொலை மிரட்டல் விடுத்த மாமனார்: ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற மருமகன்
Published on

மாமனார் கொலை மிரட்டல் விடுத்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற மருமகனை பொதுமக்கள் மீட்டனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கரிசல்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (27). இவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சமத்துவபுரத்தைச் சேர்ந்த ஜாபர் ராஜாமுகமது என்பவரது மகளை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் இவரது மனைவிக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு மற்றொருவருடன் திருமணம் நடந்து இருவரும் வாழ்ந்துள்ளதாக கூறபடுகிறது. இதனால் மனமுடைந்த பாலமுருகன் மாமனாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதையடுத்து பாலமுருகனை கொலை செய்துவிடுவதாக ஜாபர் ராஜாமுகமது மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை கன்னியாகுமரியிலிருந்து மதுரை நோக்கி சென்ற மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார் பாலமுருகன். இதனை கண்ட பொதுமக்கள் பாலமுருகனை மீட்டு திருமங்கலம் நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com