மு.க.ஸ்டாலினை வாழ்த்திய முக.அழகிரிக்கு நன்றி - மதுரையில் திமுகவினர் ஒட்டிய சுவரொட்டிகள்

மு.க.ஸ்டாலினை வாழ்த்திய முக.அழகிரிக்கு நன்றி - மதுரையில் திமுகவினர் ஒட்டிய சுவரொட்டிகள்

மு.க.ஸ்டாலினை வாழ்த்திய முக.அழகிரிக்கு நன்றி - மதுரையில் திமுகவினர் ஒட்டிய சுவரொட்டிகள்
Published on

முதல்வராக பதவியேற்றுள்ள முக.ஸ்டாலினை வாழ்த்தி, முக.அழகிரிக்கு நன்றி தெரிவித்து திமுகவினர் மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக் கொண்டார். முன்னதாக முதல்வராக பதவி ஏற்கவிருந்த தனது தம்பி முக.ஸ்டாலினை அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக.அழகிரி நேற்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்பு தனது ஆதரவாளர்களை திரட்டி பொதுக்கூட்டம் நடத்திய மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று முக.அழகிரி முக ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தது பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த அழகிரிக்கு நன்றி தெரிவித்து திமுகவினர் மதுரை மாநகர் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com