20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல் 

20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல் 

20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல் 
Published on

மதுரையில் கல்லூரி மாணவரை கடத்திய கும்பல், 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜுவின் மகனான பார்த்திபன், கொடைக்கானலில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். நேற்று வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட அவர், வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பதறிக் கொண்டிருந்த நேரத்தில், ராஜுவின் செல்ஃபோனுக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர், அவரது மகன் பார்த்திபனை கடத்தி வைத்திருப்பதாக கூறியுள்ளார். 20 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கவில்லை என்றால், பார்த்திபனை கொன்றுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். 

இதுகுறித்த புகாரின்பேரில் 2 தனிப்படைகள் அமைத்துள்ள காவல்துறை, சைபர் க்ரைம் பிரிவின் உதவியோடு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com