\
மதுரை: சக கைதியுடன் மோதல்: டியூப் லைட்டால் தன்னைத்தானே தாக்கிக் கொண்ட கைதி

மதுரை: சக கைதியுடன் மோதல்: டியூப் லைட்டால் தன்னைத்தானே தாக்கிக் கொண்ட கைதி

மதுரை: சக கைதியுடன் மோதல்: டியூப் லைட்டால் தன்னைத்தானே தாக்கிக் கொண்ட கைதி
Published on: 

மதுரை மத்திய சிறையில் சக கைதியுடனான மோதலில் டியூப் லைட்டை உடைத்து தன்னைத் தானே தாக்கிக் கொண்ட கைதியால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் முகமது உசேன் (25). கொள்ளை குற்றத்திற்காக கடந்த மாதம் சமயநல்லூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறையில் உள்ள சக கைதியுடனான பிரச்னையால் சிறைக்காவலர்கள் முகமது உசேனை சிறைக்குள் இடமாற்றம் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முகமது உசேன் காவலர்களை மிரட்டியதோடு டியூப் லைட்டை உடைத்து தனக்குத் தானே கை, கால், கழுத்து மற்றும் தலை பகுதிகளில் கீறிக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து பலத்த காயமுற்ற அவரை மீட்ட சிறைக்காவலர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com