\
அங்கன்வாடி பணியாளர் மீது பெற்றோர் புகார்
அங்கன்வாடி பணியாளர் மீது பெற்றோர் புகார்pt desk

மதுரை: குழந்தைக்கு சூடு போட்ட அங்கன்வாடி பணியாளர்? பெற்றோர் பரபரப்பு புகார் - போலீசார் விசாரணை!

அலங்காநல்லூர் அருகே அங்கன்வாடி மையத்தில் 3 வயது குழந்தைக்கு முழங்காலில் சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: பிரசன்னா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள இடையபட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிபவர் புஷ்பம். இதே கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் என்பவரின் இரண்டரை வயது வயது மகள் ஷாத்மிக்கா, இந்த அங்கன்வாடி மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Complaint copy
Complaint copypt desk

இந்த நிலையில், அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் புஷ்பம், தனசேகரின் மகள் ஷாத்மிக்காவின் முழங்காலில் தொடர்ச்சியாக சூடு வைத்ததாக தெரிகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் முழங்கால் வலிப்பதாக ஷாத்மிக்கா அழுது கொண்டே இருந்ததை தொடர்ந்து குழந்தையின் தந்தை தனசேகர், குழந்தையிடம் விசாரித்துள்ளார். அப்போது குழந்தை எதுவும் சொல்லத் தெரியாமல் அழுது கொண்டே இருந்துள்ளது.

அங்கன்வாடி பணியாளர் மீது பெற்றோர் புகார்
ஈரோடு: பெண்ணின் EMI கார்டை பயன்படுத்தி மோசடி – பஜாஜ் நிறுவன ஊழியர் உட்பட இருவர் கைது

இதனைத் தொடர்ந்து நேற்று தனசேகர் தனது குழந்தையை அங்கன்வாடி மையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளார். அப்போது ஆயா புஷ்பம், குழந்தையின் முழங்காலில் சூடு வைத்தது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தனசேகர், அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதாக தனசேகர் தெரிவித்தார்.

அங்கன்வாடி பணியாளர் மீது பெற்றோர் புகார்
அங்கன்வாடி பணியாளர் மீது பெற்றோர் புகார்pt desk

இந்நிலையில், குழந்தையின் பெற்றோரிடம் ஆயா புஷ்பம், “நான் வேறு ஊருக்கு மாற்றலாகி சென்று விடுகிறேன்; தயவு செய்து புகாரை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள்” என கெஞ்சியுள்ளார். இதையடுத்து குழந்தையின் பெற்றோர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டனர். முன்னதாக இதே போல் வேறொரு குழந்தையின் பாதத்தில் புஷ்பம் சூடு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கன்வாடி பணியாளர் மீது பெற்றோர் புகார்
திருப்பத்தூர்: “வேண்டும் வேண்டும்.. பாலம் வேண்டும்” - பதாகைகளுடன் தண்ணீரில் இறங்கிய மாணவர்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com