வைரஸ் காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி

வைரஸ் காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி

வைரஸ் காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி
Published on

மதுரையில் வைரஸ் காய்ச்சலுக்கு 6 வயது குழந்தை உயிரிழந்தது. 

மதுரை கீழ வைத்தியாநாதபுரத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் 6 வயது மகள் பிரியதர்ஷினி. இந்த சிறுமிக்கு 3 தினங்களுக்கு முன்னதாக கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. காய்ச்சல் தீவிரமடைந்ததால் பரிசோதனை செய்யப்பட்டதில் சிறுமிக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் தத்தனேரியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கு மாநகராட்சி நிர்வாகம் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com