தமிழ்நாடு
மதுரை விமான நிலையத்தில் மேடை மற்றும் ப்ளக்ஸ் பேனர் - அதிமுகவினர் மீது வழக்கு
மதுரை விமான நிலையத்தில் மேடை மற்றும் ப்ளக்ஸ் பேனர் - அதிமுகவினர் மீது வழக்கு
மதுரை விமான நிலையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் மேடை மற்றும் பிளக்ஸ் பேனர் வைத்த அதிமுகவினர் ஆறு பேர் மீது 3 பிரிவுகளில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பதவியேற்று நேற்று மதுரை விருதுநகர் ஆகிய மாவட்டத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டம் கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை மதுரை வந்தபோது அவருக்கு மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி விமான நிலைய வளாகத்திற்குள் மேடை மற்றும் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். இந்த விவகாரத்தில் அவனியாபுரம் காவல் துறையினர் 3 பிரிவுகளில் கீழ் 2 வழக்குகளை ஆறு பேர் மீது பதிவு செய்துள்ளனர்.