மதுரை: நோயாளியை ஸ்டெச்சரில் அழைத்துச் செல்ல லஞ்சம் - கள ஆய்வில் சிக்கிய ஊழியர்

மதுரை: நோயாளியை ஸ்டெச்சரில் அழைத்துச் செல்ல லஞ்சம் - கள ஆய்வில் சிக்கிய ஊழியர்
மதுரை: நோயாளியை ஸ்டெச்சரில் அழைத்துச் செல்ல லஞ்சம் - கள ஆய்வில் சிக்கிய ஊழியர்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளை ஸ்டெச்சரில் அழைத்துச் செல்ல மருத்துவமனை ஊழியர் லஞ்சம் வாங்குவது புதிய தலைமுறை கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

தென் மாவட்ட மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் 4 ஆயிரம் உள் நோயாளிகளும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளை உள் நோயாளிகளாக அனுமதிக்க ஸ்டெச்சரில் அழைத்துச் செல்லும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து இது தொடர்பாக புதிய தலைமுறை கள ஆய்வு மேற்கொண்டது.

ஆப்போது ஒரு பெண் நோயாளியை 202வது வார்டுக்கு உள்நோயாளியாக அனுமதிக்க ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்துச் செல்லும் பெண் ஒப்பந்த ஊழியர் நோயாளி தரப்பிடமிருந்து லஞ்சம் பெறும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற போதிய பொருளாதார வசதி இல்லாமல் ஏழ்மையான நிலையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்குவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதேபோல் வரும் அனைத்து நோயாளிகளிடமும் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் அதனை தடுக்க மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இது குறித்து மருத்துவனை முதல்வர் ரத்னவேலிடம் கேட்டபோது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com