மதுரை | பாஜக நிர்வாகி மர்ம மரணம் - காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு
செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை மாநகர் எஸ்.ஆலங்குளம் டிசைன் நகர் 3 தெரு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. கார் டிரைவரான இவர், பாஜக ஓபிசி அணியின் செல்லூர் மண்டல செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற கருப்பசாமியை நேற்று வரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், இன்று காலை கூடல் புதூர் சர்ச் அருகே மூக்கில் நுரைவந்த நிலையில் கருப்பசாமியின் உடல் காரில் இருந்து மீட்கப்பட்டது.
இது தற்கொலையா? வேறு ஏதேனும் காரணமா என்ற அடிப்படையில் கூடல் புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பாஜக நிர்வாகி கருப்பசாமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உரிய விசாரணை நடத்துமாறு உடலை பெற மாட்டோம் என பாஜக நிர்வாகிகளும் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்
திங்கட்கிழமை இரவு வீட்டிலிருந்து சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எனவே சிசிடிவி கேமிர ாக்களை ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது குறித்து காவல்துறையிடம் கேட்ட போது, சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, கருப்பசாமி மது குடிக்கும் பழக்கம் கொண்டவர். இருப்பினும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.