“நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் எங்கள் நோக்கம் அதுவல்ல...” - நீதிமன்றம் சொன்ன கருத்து

“நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகளை நேரில் வரவழைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. கல்வித் துறைக்கு அடுத்தப்படியாக வனத்துறையில்தான் அதிகபடியான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கலாகின்றன” என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
madurai high court branch
madurai high court branchpt desk

திருச்சியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் வனத் துறையில் காவலராக பணியாற்றி வந்தார். அவர் தனக்கு பதவி உயர்வு வழங்கக் கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இதில் சம்பந்தப்பட்ட மனுதாரரின் மனுவை பரிசீலித்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.


Dept of school education
Dept of school educationpt desk

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை எனக்கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2017 ஆம் ஆண்டு கருப்பையா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு பல காலமாக விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி, நீதிமன்ற உத்தரவை பல ஆண்டுகளாக நிறைவேற்றாதது குறித்து விளக்கமளிக்க வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று ஆஜரானார்.

Court order
Court orderpt desk

அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், “கல்வித் துறைக்கு அடுத்தபடியாக வனத்துறை சார்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அதிகளவில் தாக்கல் செய்யப்படுகின்றன. நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகளை வரவழைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு பல ஆண்டுகள் ஏன் தாமதமாகிறது?

நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் முறையாக நிறைவேற்றினாலே அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துவிடும்” என தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டதாக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com