அடங்க மறுத்து அட்டகாசம் செய்த காளை
அடங்க மறுத்து அட்டகாசம் செய்த காளைpt desk

மதுரை: வந்த இடத்துல இப்டியா – அடங்க மறுத்து அட்டகாசம் செய்த காளை – அச்சமடைந்த காவலர்கள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களம் காண வந்த காளை, வாடிவாசலுக்கு செல்வதற்கு முன்பே மருத்துவ பரிசோதனை செய்யும் இடத்தில் இருந்த காவலர்கள் மீது பாய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

செய்தியாளர்: மலைச்சாமி

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம் பாண்டியன்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது காளை ராமு, வாடி வாசலுக்கு செல்வதற்கு முன்பே மருத்துவப் பரிசோதனை செய்யும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டது.

அடங்க மறுத்து அட்டகாசம் செய்த காளை
அடங்க மறுத்து அட்டகாசம் செய்த காளைpt desk

அப்போது அந்தக் காளை அதன் உரிமையாளருக்கு அடங்க மறுத்து அங்கிருந்த காவலர்களை முட்ட முயன்று துள்ளிக் குதித்து அனைவருக்கும் பயத்தை காட்டியது ஒரு கட்டத்தில் விசும்பி ஓட முயன்ற காளையை, அரை மணி நேரம் வரை போராடி காளையின் உரிமையாளரும் அவரின் உதவியாளர்களும் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.

அடங்க மறுத்து அட்டகாசம் செய்த காளை
மதுரை: ‘எங்க வந்து யாருகிட்ட..’ - சீறிப்பாயும் காளைகள்... சினம் கொண்டு அடக்கும் காளையர்!

இதைத் தொடர்ந்து அந்தக் காளையை வாடி வாசலுக்கு அழைத்துச் சென்றனர். காளையின் இந்த செயலால் அங்கிருந்தவர்கள் அச்சமடைந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com