மதுரை: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு

மதுரை: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு

மதுரை: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு
Published on

மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சகோதரர்கள் இருவர் உடல்நசுங்கி நிகழ்விடத்திலே உயிரிழந்தனர்.

மதுரை களிமங்கலத்தைச் சேர்ந்த சகோதரர்களான நியாஸ் லுக்மான் மற்றும் அவரது தம்பி இஜாஸ் முகம்மது ஆகிய இருவரும் மேலூர் அருகே கருங்காலக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் தலைநசுங்கி நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த கொட்டாம்பட்டி போலீசார,; இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து கண்காணிப்பு கேமிராக்கள் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com