தமிழ்நாடு
மதுரை: ஆதரவற்று இறந்து கிடந்த முதியவர்; வங்கிக் கணக்கில் ரூ. 20 லட்சம் இருந்ததால் பரபரப்பு
மதுரை: ஆதரவற்று இறந்து கிடந்த முதியவர்; வங்கிக் கணக்கில் ரூ. 20 லட்சம் இருந்ததால் பரபரப்பு
மதுரையில் ஆதரவற்ற நிலையில் உயிரிழந்து கிடந்த முதியவரின் வங்கிக் கணக்கில் 20 லட்சம் ரூபாய் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை அரசு மருத்துவமனை முன்பாக சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற முதியவர் இறந்துகிடந்த நிலையில் காவல் துறையினரால் சடலமாக மீட்கப்பட்டார். அப்போது அவரது உடைமைகளை பரிசோதனை செய்தனர். அப்போத அவர் வைத்திருந்த வங்கிக் கணக்கு புத்தகத்தை எடுத்து பார்த்ததில், வங்கிக் கணக்கில் 20 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உயிரிழந்துள்ள நபர் யார் என்பது குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ராதா என்பதும் நாகமலைபுதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.