மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாpt web

மதுரை: பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அமித்ஷா.. எதிர்கால திட்டங்கள் என்ன?

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.
Published on

செய்தியாளர் மணிகண்ட பிரபு

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கும் அவர், கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில கட்சிகள் தற்போதே பணிகளை தொடங்கியுள்ளன. இதன் ஒருபகுதியாக மதுரையில் ஜூன் 1ஆம் தேதி முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் மதுரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில், பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றபின், தமிழக நிர்வாகிகளை அமித்ஷா சந்திக்கிறார். பாஜகவின் அமைப்பு ரீதியாக உள்ள 13 பிரிவுகளின் நிர்வாகிகள் மற்றும் 6 அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இதில், வரும் சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி, நிர்வாகிகளுக்கு அமித்ஷா முக்கிய ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் 22ஆம் தேதி மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டுக்கு பாஜகவினர் ஒத்துழைப்பு அளித்து பணிகளை மேற்கொள்வது குறித்தும், அமித்ஷா ஆலோசனை வழங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
இந்தியாவின் முதல் நீர்மூழ்கிப் போர்க் கப்பல்.. ஜூன் 18 முதல் சேவை.. அர்னாலா சிறப்புகள் என்ன?

ஆலோசனை கூட்டத்துக்கு மத்தியில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களையும் அமித்ஷா சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அமித்ஷாவை சந்திக்க தமக்கு அழைப்பு வரவில்லை என தெரிவித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தாமும் அவரை சந்திக்க நேரம் கேட்கவில்லை எனக் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்கோப்புப்படம்

கடந்த காலங்களில் கொங்கு மற்றும் வட மாவட்டங்களை நோக்கி இருந்த பாஜகவின் பார்வை தற்போது தென் மாவட்டங்களை நோக்கி திரும்பி இருக்கிறது. குறிப்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மதுரை பயணம் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மதுரையில் இருந்து பரப்புரையை தொடங்கும் நோக்கில், அங்கு மாநில நிர்வாகிகள் கூட்டத்தை பாஜக நடத்துவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com