பெண் தலைமை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு - மகள் உயிரிழந்த ஓராண்டில் நிகழ்ந்த சோகம்!

பெண் தலைமை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு - மகள் உயிரிழந்த ஓராண்டில் நிகழ்ந்த சோகம்!

பெண் தலைமை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு - மகள் உயிரிழந்த ஓராண்டில் நிகழ்ந்த சோகம்!

மதுரையில் அனைத்து மகளிர் காவல்நிலைய பெண் தலைமை காவலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மதுரை எச்.எம்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் 47 வயதான சுமித்ரா. இவர் மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். சுமித்ராவின் மகள் தர்ஷி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது, முதலே சுமித்ரா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்து வந்ததாகவும், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் தலைமைக்காவலர் சுமித்ரா கடந்த 4-ம் தேதி முதல் மருத்துவ விடுப்பு எடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் சுமித்ரா மாரடைப்பால் இறந்த சம்பவம் பெண் காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com