மதுரை: நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி- எதிர்பார்ப்பில் காளையும் காளையரும்

மதுரை: நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி- எதிர்பார்ப்பில் காளையும் காளையரும்
மதுரை: நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி- எதிர்பார்ப்பில் காளையும் காளையரும்

நாளை நடைபெறும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி, ஞாயிறு முழு முடக்கம் காரணமாக திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டு நாளை நடைபெற இருக்கிறது. நூளை காலை 7 மணிக்கு போட்டி தொடங்க உள்ள நிலையில், வாடிவாசல், விழா மேடை, பார்வையாளர்கள் மாடம், காளைகள் நிறுத்திவைக்கும் இடம், பரிசோதனை மையம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்ட பரபரப்புடன் நடைபெற்றது.

அரசு சார்பில் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க ஆயிரம் காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 300 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து காளைகளை பரிசோதித்து அனுப்ப அனைத்து நிலைகளிலும் கால்நடைத்துறை தயாராக உள்ளதாக கால்நடைத்துறை தலைமை மருத்துவர் நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போட்டியை நடத்த அனைத்து ஏற்பாடும் விரிவாக செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அலங்காநல்லூரில் காளைகள் வாடிவாசலிருந்து வந்து இடது புறம் வளைந்து செல்லும் கட்டமைப்பில் உள்ளதாகவும், இது காளைகள் நீண்ட நேரம் நின்று விளையாடும் வகையில் இருப்பதால் தங்களை போன்ற ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும் என்கிறார்கள் அலங்காநல்லூர் மக்கள்.

அரசு சார்பில் நடைபெறும் இந்த போட்டியில் சிறந்த காளை, சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோல் வெற்றி பெறும் அனைத்து காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசு மற்றும் பரிசுப்பொருட்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்களின் மத்தியில் ஆர்வமும் அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com