காவல்துறை விசாரணைக்கு ஆஜராகாத மதுரை ஆதீனம்
காவல்துறை விசாரணைக்கு ஆஜராகாத மதுரை ஆதீனம்pt

கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக வழக்கு.. 2வது முறையாக விசாரணைக்கு ஆஜராகாத மதுரை ஆதீனம்!

இரண்டு சமூகத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசிய வழக்கில் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஆதீனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
Published on

கடந்த மே 2-ம் தேதி சென்னை நோக்கி வந்த மதுரை ஆதீனம் பயணித்த காரும், சேலத்​தில் இருந்து சென்னை நோக்கி வந்த மற்றொரு காரும் உளுந்​தூர்​பேட்டை பகு​தி​யில் மோதி விபத்துக்குள்​ளாகின.

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்pt desk

இரண்டு கார்​களும் லேசாக சேதமடைந்​த நிலையில் விபத்து குறித்து பேசிய ஆதினம், மாற்று மதத்தை சேர்ந்த சிலர் தன்னை கார் ஏற்றி கொல்ல முயன்​ற​தாக குற்றம்  ​சாட்​டி​னார் மதுரை ஆதினம், இதற்கு காவல் துறை மறுப்பு தெரி​வித்​தது.

2வது முறையாக ஆஜராகாத ஆதீனம்!

இந்த நிலை​யில், உயர்நீதி​மன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன் அளித்த புகாரின்​ பேரில், இரு சமூகத்​தினர் இடையே பகைமையை ஏற்​படுத்துதல் உட்பட 4 பிரிவு​களின் கீழ் மதுரை ஆதீனம் மீது சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்குப்பதிவு செய்​தனர்.

இதுதொடர்​பாக நேரில் ஆஜராகி விளக்​கம் அளிக்​கு​மாறு ஆதீனத்துக்கு சைபர் க்ரைம் போலீ​ஸார் கடந்த 30-ம் தேதி சம்​மன் அனுப்பினர். ஆனால், அவர் அப்போது ஆஜராக​வில்​லை.

இந்​நிலை​யில், சென்னை சேத்​துப்​பட்டு காவல் நிலைய வளாகத்​தில் உள்ள சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் அலுவலகத்தில் வரும் 5-ம் தேதி ஆஜராகு​மாறு மதுரை ஆதீனத்துக்கு 2-வது முறை​யாக போலீ​ஸார்​ சம்​மன்​ அனுப்​பி இருந்தனர்.

இந்த சூழலில் இன்றும் சேத்துப்பட்டு சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல்நிலையத்தில் மதுரை ஆதினம் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரின் தனிச்செயலாளர் செல்வக்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் ஆஜாராகி உள்ளனர். காணொளி மூலம் ஆஜாராக போலீஸார் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக அவரால் ஆஜராக முடியவில்லை எனவும், கால அவகாசம் வேண்டும் எனவும் மதுரை ஆதீனம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com