மதுரை: சிதிலமடைந்த கோயிலில் கண்டறியப்பட்ட கிபி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு

மதுரை: சிதிலமடைந்த கோயிலில் கண்டறியப்பட்ட கிபி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு

மதுரை: சிதிலமடைந்த கோயிலில் கண்டறியப்பட்ட கிபி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு
Published on

மதுரை மாவட்டம் வில்லூர் அருகே போத்தநதி என்ற ஊரில் கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் கால தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போத்தநதி ஊராட்சி மன்றத் தலைவர் விநாயகமூர்த்தி என்பவர் தங்கள் ஊரில் பழமையான கோவில் இருப்பதாக கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனீஸ்வரன் தலைமையில் ஆனந்த குமரன், கருப்பசாமி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியன் காலத்து கல்வெட்டும், சிதைந்த நிலையில் சிவன் கோவிலும் கண்டறியப்பட்டுள்ளன.



இவ்வூரின் தெற்குப் பகுதியில் போத்தன் ஊரணியின் அருகே பாழடைந்த நிலையில் கருவறை, கோபுரம், முன் மண்டபம் கொண்ட கோவில் கண்டறியப்பட்டன. கோவிலின் அமைப்பை ஆய்வு செய்தபோது செங்கற்கள் சாந்து சேர்ந்து கட்டிய கோபுரம் முற்றிலும் சிதிலமடைந்து சிற்பங்கள் சிதைந்த நிலையில் இருக்கிறன. கருவறை சதுர வடிவத்தில் கிழக்கு நோக்கியும், உட்பகுதி வடக்கு, தெற்கு திசையில் மாடக்குழிகளும் சிலைகள் இன்றி அமைந்துள்ளன. முன்மண்டபம் முற்றிலும் சிதிலமடைந்துள்ளதால் மிஞ்சிய தூண்களில் வாயிற் காவலர்கள் ஆண், பெண் சிற்பங்களாக நின்று வணங்கிய நிலையிலும், பூ மொட்டு போதிகையுடன் தூணின் இரண்டு பக்கமும் செதுக்கப்பட்டுள்ளது.



கோவிலின் பாத பந்த அதிட்டானம் குமுத வரி பகுதியில் 3 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட 8 வரி சொற்கள் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பல சொற்கள் தேய்மானம் ஏற்பட்டதால் தமிழக தொல்லியல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற முனைவர் சாந்தலிங்கம் உதவியுடன் மை படியெடுத்து ஆய்வு செய்தபோது 'திருவாய்க்கேள்விக்கு மேல் ஸ்ரீ கோமாற பன்மரன் திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு மாடக்குழக்கு மதுரை திருவாலவாயுடையார் கோவில்' என்ற வரிகள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியன் ஆட்சி காலத்தைச் (1216- 1239) சேர்ந்தவையாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com