மதுரை: 4 வழிச்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மதுரை: 4 வழிச்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மதுரை: 4 வழிச்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
Published on

கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர், சொந்த வேலை காரணமாக தனது காரில் மணப்பாறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடி நான்கு வழிச்சாலையில் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார்.

அப்போது திடீரென கார் கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்துள்ளது.இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் குடத்தில் தண்ணீர் கொண்டுவந்த ஊற்றி தீயை அணைத்துள்ளனர்.

காரின் குளிரூட்டி பழுதாகி இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com