Tragedy
Tragedypt desk

மதுரை: இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்து - வெளிநாடு செல்ல இருந்தவருக்கு நேர்ந்த துயரம்!

மேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் இன்று வெளிநாடு செல்ல இருந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Published on

செய்தியாளர்: ரமேஷ்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கச்சராயன்பட்டியைச் சேர்ந்த அய்யாவு என்பவரது மகன் அழகு (35). துபாயில் வேலை பார்த்து வந்த இவருக்கும் அ.கோவில்பட்டியைச் சேர்ந்த பவின் என்பவருக்கும் திருமணமாகி, ஆதீஸ்வரன் (7) என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் அழகு துபாயிலிருந்து விடுமுறையில் சென்ற மாதம் தனது சொந்த ஊர் திரும்பியுள்ளார். இதையடுத்து விடுமுறை நாட்கள் முடிந்த நிலையில், இன்று மீண்டும் துபாய் செல்ல இருந்தார்.

govt bus
govt buspt desk

இந்நிலையில், தனது மாமனார் ஊரான கோவில்பட்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்ற அவர், இன்று அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி வந்துள்ளார். அப்பொழுது மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையை கடக்க முற்பட்டபோது திருச்சியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Tragedy
கள்ளக்குறிச்சி | விஷ சாராயத்தால் உயிரிழந்த தாய் தந்தை... பரிதவித்து நிற்கும் 3 குழந்தைகள்!

தகவல் அறிந்து அங்கு வந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com