\
மதுரை: ஆயுதங்களை காட்டி மிரட்டி 75 பவுன் நகைகள் ரூ 1 லட்சம் பணம் கொள்ளை

மதுரை: ஆயுதங்களை காட்டி மிரட்டி 75 பவுன் நகைகள் ரூ 1 லட்சம் பணம் கொள்ளை

மதுரை: ஆயுதங்களை காட்டி மிரட்டி 75 பவுன் நகைகள் ரூ 1 லட்சம் பணம் கொள்ளை
Published on

மேலூர் அருகே ஆயுதங்களை காட்டி மிரட்டி 75 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த சத்தியபுரத்தைச் சேர்ந்தவர் கோபி. இவர், தனது குடும்பத்துடன் நேற்றிரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், கோபி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி 75 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து கோபி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் காவல் துறையினர், மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் உதவியுடன் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், ஏடிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com