மதுரை: 30 நிமிடங்கள்; 1250 தோப்புக்கரணம் - உலக சாதனை படைத்த சகோதரர்கள்

மதுரை: 30 நிமிடங்கள்; 1250 தோப்புக்கரணம் - உலக சாதனை படைத்த சகோதரர்கள்

மதுரை: 30 நிமிடங்கள்; 1250 தோப்புக்கரணம் - உலக சாதனை படைத்த சகோதரர்கள்
Published on

30 நிமிடங்களில் 1250 முறை உக்கி போட்டு அண்ணன் - தம்பி உலக சாதனை படைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் முத்துராமன் - தேவகி தம்பதியினர். இவர்களின் 14 வயது மகன் சுபாஷ் மற்றும் 13 வயது மகன் பரத் ஆகியோர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சூப்பர் பிரைன் யோகா எனப்படும் உக்கி போடுதலை 30 நிமிடங்களில் 1000 முறை செய்து ஸ்பாட் லைட் உலக சாதனை முயற்சி மேற்கொண்டனர். இதில் சிறுவன் சுபாஷ் 30 நிமிடத்தில் தொடர்ச்சியாக 1250 முறை உக்கி போட்டு உலக சாதனை படைத்தார்.

அதனைத்தொடர்ந்து பரத் நாற்காலி மீது ஏறி தொடர்ச்சியாக அரைமணி நேரத்தில் 1068 முறை உக்கி போட்டு உலக சாதனை படைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை கலந்து கொண்டு உலக சாதனை படைத்த சகோதரர்களுக்கு மாலை அணிவித்து பாராட்டு சான்றிதழையும், பரிசையும் வழங்கினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com