மதுரையில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து : உரிமையாளர் கைது
மதுரை செக்கானூரணியில் கட்டப்பட்டுவரும் கட்டடம் ஒன்று சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானதையடுத்து கட்டிட உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை செக்கானூரணியில் மாதவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மூன்று மாடிகள் கட்டப்பட்டுள்ள நிலையில் இன்று திடீரெனெ அதன் சுவர் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில், கட்டடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 5பேரை மீட்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து கட்டட உரிமையாளர் மாதவனை செக்கானூரணி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.