\
இது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

இது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

இது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
Published on

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் யானை தாக்கியதில் பாகனின் உதவியாளர் உயிரிழந்துள்ளார்.

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு அசாமிலிருந்து கொண்டுவரப்பட்ட பெண் யானையான ‘தெய்வானை’ யானையை நேற்று மாலை பாகனின் உதவியாளர் காளிதாஸ் என்பவர், குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென காளிதாஸை யானை தாக்கியதில் படுகாயமடைந்து ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.14 வயதுடைய தெய்வானை யானை கடந்த 60 நாட்களாக கோயில் பூட்டப்பட்டிருந்த நிலையில் வெளியில் செல்லாமல் இருந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன்பாக புத்துணர்ச்சி முகாமிற்கு சென்று திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இரண்டு முறை யானை திடீரென மிரண்டு பாகன்களை தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் 3-வது முறையாக கோயில் யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com