\
மதுரை: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிக்கு நாளை மறுதினம் முதல் முன்பதிவு

மதுரை: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிக்கு நாளை மறுதினம் முதல் முன்பதிவு

மதுரை: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிக்கு நாளை மறுதினம் முதல் முன்பதிவு
Published on: 

மதுரையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நாளை மறுதினம் முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மதுரை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் மதுரையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்புசி செலுத்திக்கொள்ள மதுரை மாநகராட்சி இணையதளத்தில் நாளை மறுதினம் முதல் முன்பதிவு செய்யலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இணைய வசதி இல்லாதவர்கள் தடுப்பூசி மையத்திற்கு நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தபட்டுள்ளனர். 24ஆம் தேதி முதல் இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com