150 கிடாய்கள், 300 கோழிகள் - மதுரை கோவிலில் நடைபெற்ற பிரியாணி திருவிழா

150 கிடாய்கள், 300 கோழிகள் - மதுரை கோவிலில் நடைபெற்ற பிரியாணி திருவிழா

150 கிடாய்கள், 300 கோழிகள் - மதுரை கோவிலில் நடைபெற்ற பிரியாணி திருவிழா
Published on

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி ஸ்ரீ முனியாண்டிசுவாமி திருக்கோவிலில் 85வது ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டியில் ஸ்ரீ முனியாண்டிசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைமாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று பிரியாணி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 85வது ஆண்டாக பிரியாணி திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி விரதம் மேற்கொள்வர். இந்நிலையில் நேற்று காலை விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர், நேற்று இரவு முதல் கோவிலில் பூஜைகளும், பரிகாரங்களும் விமர்சியாக நடைபெற்றன. பின்னர் 150 கிடாய்கள், 300 கோழிகள் வெட்டப்பட்டு பிரியாணி சமைக்கப்பட்டது. சமைக்கப்பட்ட உணவு இன்று அதிகாலை பக்தர்களுக்கு பிரசாதமாக பறிமாறப்பட்டது.

தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல இடங்களைச் சேர்ந்த ஸ்ரீமுனியாண்டிவிலாஸ் ஹோட்டல் உரிமையாளர்களும் மற்றும் உள்ளூர் மக்கள் ஏராளமானோரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com