இந்தியாவிலேயே தூய்மையான கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

இந்தியாவிலேயே தூய்மையான கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

இந்தியாவிலேயே தூய்மையான கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
Published on

இந்தியாவிலேயே தூய்மையான கோவிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இந்திய அளவில் மட்டும் அல்ல உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் தூய்மையான கோவிலாக தேர்வாகியுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த சிறப்பு விருதினை வழங்க உள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் மற்றும் மாநகர கமிஷனர் அனீஷ் சேகர் மத்திய அமைச்சர் உமா பாரதியிடம் இருந்து நாளை இந்த விருதினை பெற உள்ளனர். சுவிட் ஐகானிக் (Swachh Iconic Places) திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இருந்து 10 கோவில்களை இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்வு செய்து மத்திய அரசு கண்காணித்து வந்தது.

மேலும், 2018 மார்ச் மாதத்திற்குள் கோவிலை சுற்றியுள்ள சித்திரை, மாசி, ஆவணி மூல வீதி மற்றும் வேலி வீதிகளை பிளாஸ்டிக் இல்லா வீதிகளாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com