விடுமுறையை கொண்டாடிவிட்டு திரும்பியபோது விபத்து: சிறுவன் பலி- பகீர் சிசிடிவி காட்சிகள்

விடுமுறையை கொண்டாடிவிட்டு திரும்பியபோது விபத்து: சிறுவன் பலி- பகீர் சிசிடிவி காட்சிகள்
விடுமுறையை கொண்டாடிவிட்டு திரும்பியபோது விபத்து: சிறுவன் பலி- பகீர் சிசிடிவி காட்சிகள்

வேன் மோதியதில் நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மற்றும் வேன் இடையே கார் சிக்கிய நெஞ்சை பதைபதைக்க வைக்கும் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை மதுக்கரையில் கார் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். பிரஸ்காலனியைச் சேர்ந்த செல்வராஜ், தனது பேரன்களான நித்தின்,கால்வின், யுவன் கிரிசின் ஆகியோருடன் கோடை விடுமுறையைக் கொண்டாட கேரள மாநிலம் மலம்புழா சென்று திரும்பியுள்ளார்.

இந்நிலையில், மதுக்கரை நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில், யுவன் கிரிசின் என்ற சிறுவன் உயிரிழந்த நிலையில், 2 சிறுவர்கள் மற்றும் அவர்களது தாத்தா செல்வராஜூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேன் மோதியதில் நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மற்றும் வேன் இடையே கார் சிக்கிய நெஞ்சை பதைபதைக்க வைக்கும் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com