\
“பேராசிரியர்கள் மாணவர்களை வீடுகளுக்கு அழைக்கக்கூடாது”- சென்னை பல்கலை., சுற்றறிக்கை..!

“பேராசிரியர்கள் மாணவர்களை வீடுகளுக்கு அழைக்கக்கூடாது”- சென்னை பல்கலை., சுற்றறிக்கை..!

“பேராசிரியர்கள் மாணவர்களை வீடுகளுக்கு அழைக்கக்கூடாது”- சென்னை பல்கலை., சுற்றறிக்கை..!
Published on

மாணவ, மாணவியரை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் தங்களது வீடுகளுக்கு அழைக்கக்கூடாது என சென்னை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் அழைத்தால் வீடுகளுக்கு செல்லக்கூடாது எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் வீடுகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டால், பல்கலைக்கழகத்தில் உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலியல் தொந்தரவு அற்ற வளாகமாக சென்னை பல்கலைக்கழக வளாகத்தை மாற்றும் முயற்சி இது என சென்னை பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

பாலியல் தொந்தரவு இருந்தால், பேராசிரியர் ரீட்டா ஜான் தலைமையிலான குழுவிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ள பல்கலைக்கழகம், மாணவர்கள், பேராசிரியர்கள் தரப்பினர் தவறிழைத்தால் உரிய நடவடிக்கை இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com