கார்த்தி சிதம்பரம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

கார்த்தி சிதம்பரம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

கார்த்தி சிதம்பரம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
Published on

கார்த்தி சிதம்பரம் மீதான வருமானவரித்துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

முட்டுக்காட்டில் 1.18 ஏக்கர் நிலம் விற்ற வருமானத்தை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி கார்த்தி சிதம்பரம், மனைவி ஸ்ரீநிதி மீது வருமானவரித்துறை வழக்கு தொடர்ந்தது. வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கை எழும்பூர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி கார்த்தி சிதம்பரமும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம், மனைவி ஸ்ரீநிதி மீதான வருமானவரி வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அத்துடன், தமிழக அரசு, வருமானவரித்துறை, தலைமைப் பதிவாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஆகஸ்ட் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com