\
சுபஸ்ரீ விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - உயர் நீதிமன்றம்

சுபஸ்ரீ விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - உயர் நீதிமன்றம்

சுபஸ்ரீ விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - உயர் நீதிமன்றம்
Published on

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com