இலவச அரிசி குறித்து நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி

இலவச அரிசி குறித்து நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி

இலவச அரிசி குறித்து நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி
Published on

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத் என்பவர், ரேஷன் அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைதுக்கான உத்தரவை வேலூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்திருந்த நிலையில், அமர்நாத்தின் மனைவி மாவட்ட ஆட்சியரின் கைது உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில்
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது நீதிபதிகள் கிருபாகரன், ராஜமாணிக்கம் ஆகியோர் அமர்வு தமிழக உணவு மற்றும் கூட்டுறவுத் துறை முதன்மை செயலாளருக்கு சில கேள்விகளை எழுப்பினர்.

கேள்விகள்:

1) எத்தனை குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது? ஒவ்வொரு அட்டைக்கும் எவ்வளவு இலவச அரிசி வழங்கப்படுகிறது?

2) ஒரு ஆண்டுக்கு கொடுக்கப்படும் இலவச அரிசியின் அளவு எவ்வளவு?

3) ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் கொடுக்கும் அரிசியின் அளவு போதுமானதா? கூடுதலானதா? குறைவானதா?

4) பொதுமக்களுக்கு அனுப்பப்படும் இலவச அரிசியில் முறைகேடு செய்ததாக எத்தனை அரசு ஊழியர்கள்/அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது? அப்படி பதிவு செய்து இருந்தால் யார் மீது பதிவு செய்யப்பட்டது?

5) ஒரு ஆண்டில் இலவசமாக கொடுக்கப்படும் அரிசியின் மொத்த மதிப்பு எவ்வளவு?

6) இலவச அரிசி கிடைக்கவில்லை என ஒவ்வொரு மாதமும் எவ்வளவு புகார்கள் அரசுக்கு வருகிறது?

7) கடந்த 10 ஆண்டுகளில் இலவச அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதா அல்லது குறைந்துள்ளதா?

8) பொது விநியோக முறையில் வழங்கப்படும் ஒரு கிலோ அரிசியின் தற்போதைய சந்தை மதிப்பு என்ன?

9) ஒவ்வொரு அட்டைதாரருக்கும் மாதம் 20 கிலோ அரிசி எதனடிப்படையில் வழங்கப்படுகிறது ? இலவச அரிசி பெறும் திட்டத்தில் குடும்ப அட்டைதாரரை சேர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?

10) ரேசன் அரிசி முறையாக விநியோகிக்கபடுகிறதா அல்லது கையாடல் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஏதேனும் நடைமுறைகள் உள்ளதா?

11) இலவச அரிசி பெறுபவர்கள் முழுமையாக பயன்படுத்துகிறார்களா அல்லது அவர்களும் கையாடலுக்கு துணைபோகிறார்களா?

 அப்படி துணைபோனால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

12) கடந்த பத்தாண்டுகளில்  அரிசி கடத்திய புகாரில் குண்டர் சட்டத்தில் ஒரு முறைக்கு மேல் எத்தனை பேர் அழைக்கப்பட்டனர்?

13) ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுகிறதா அல்லது தமிழகத்தில் மட்டும்தான் செயல்படுகிறதா?

14) இரட்டை வேக்காடு அரிசி இலவசமாக வழங்குவதற்கான நோக்கம் என்ன? இரட்டை வேக்காடு புழுங்கல் அரிசி, ஒற்றை வேக்காடு புழுங்கல் அரிசி, பச்சரிசி ஆகியவற்றின் தன்மைகள் என்ன?

15) பொது விநியோக முறையில் அரிசி வழங்கப்படும் முன் எவ்வளவு காலம் சேமித்து வைக்கப்படுகிறது?

16) ரேஷன் அரிசியை வீணடித்தது தொடர்பாக வழக்கு ஏதும் உள்ளதா?

 அப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால், கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

17) எத்தனை விதமான குடும்ப அட்டைகள் உள்ளன? ஒவ்வொரு வகையிலும் என்னென்ன விதமான பொருட்கள் வழங்கப்படுகின்றன?

18) ஒவ்வொரு விதத்திலும் எத்தனை குடும்ப அட்டைகள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளன?

இந்தக் கேள்விகளுக்கான விளக்கத்தை நவம்பர் 1ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com