உரிமம் இல்லாத இறைச்சிக் கடைகள் மீது வழக்குப் பதிய தமிழக அரசுக்கு உத்தரவு

உரிமம் இல்லாத இறைச்சிக் கடைகள் மீது வழக்குப் பதிய தமிழக அரசுக்கு உத்தரவு

உரிமம் இல்லாத இறைச்சிக் கடைகள் மீது வழக்குப் பதிய தமிழக அரசுக்கு உத்தரவு
Published on

உரிய உரிமங்கள் இல்லாமல் இறைச்சிக் கடைகளில் ஆடு, கோழிகளை வெட்டுபவர்களுக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், பனகல் கிராமத்தில் முகமது அலி என்பவர் உரிமம் இல்லாமல் இறைச்சிக்கடையில் ஆடு, கோழிகள் வெட்டப்படுவதாக கூறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். உணவுக்காக விலங்குகள் வெட்டப்படுவதை முறைப்படுத்தும், விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், உரிமம் இல்லாமல் ஆடு, கோழிகள் வெட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்களா என தெரிவிக்காததில் இருந்து, இந்த விதிகள் அமல்படுத்தப்படவில்லை என்றே கருத வேண்டியிருப்பதாகக் கூறி, விதிகளை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

விதிகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதி, உரிமம் இல்லாமல் ஆடு, கோழிகளை வெட்டுபவர்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இந்த விதிகளை அமல்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com